மாங்காய் இனிப்பு பச்சடி செய்ய தேவையான பொருள்கள்:
மாங்காய் – 1
வெல்லம் – 2
தாளிக்க:
எண்ணெய் – 2 டேபில் ஸ்பூன்
கடுகு – சிறிது
உளுந்து – சிறிது
மிளகாய் தூள் – 2
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – சிறிதளவு
செய்முறை:
முதலில் மாங்காயை எடுத்து, அதன் தோலை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, அதில் வெல்லம் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கரையும் அளவுக்கு கொதித்ததும், பாகு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும்.
பிறகு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து, மிளகாய் தூள், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய மாங்காய் துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, சிறிது உப்பு சேர்த்து, வேகும் அளவுக்கு நன்கு வதக்கி கொள்ளவும்.
பின்பு வதக்கிய மாங்காயானது, முக்கால் பதம் வெந்தவுடன், பாகு காய்ச்சி வைத்துள்ள வெல்லதை சேத்து நன்கு கரையும் வரை கிளறியபின் இறக்கி வைத்து பரிமாறினால் சுவையான மாங்காய் இனிப்பு பச்சடி ரெடி.
இந்த மாங்காய் பச்சடியில் புளிப்பு, உப்பு, காரம், இனிப்பு என அனைத்து சுவைகளும் கலந்திருப்பதால் அருமையான ருசியில் இனிப்பு மாங்காய் பச்சடி சாதத்துடன் சாப்பிடலாம்.