ஜிஞ்சர் சூப் செய்ய தேவையான பொருள்கள்:
இஞ்சி – 1 துண்டு
கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 5 எண்ணம்
தக்காளிச்சாறு – 1/2 கப்,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத் தூள் – தேவைக்கேற்ப,
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் இஞ்சியை எடுத்து சுத்தம் செய்து மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். பின்பு காய்ந்த மிளகாய், பூண்டையும் தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய், பூண்டை சேர்த்து நன்கு வதக்கிய பின்பு, அதில் கார்ன் ஃப்ளோர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி , தக்காளிச்சாறை சேர்த்து நன்கு கொதித்தபின் அதில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து சிறிது கிளறியவுடன் பரிமாறினால் சுவையான இஞ்சி சூப் ரெடி.