Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பில் தெம்பு அதிகரிக்க… இந்த நவதானிய கொழுக்கட்டையை… செய்து சாப்பிடுங்க..!!

நவதானிய கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் :

தானிய மாவு                    – 1 கப்
வெல்லம்                           – அரை கப்
தேங்காய்                           – அரை மூடி
நெய்                                     – 1 டீஸ்பூன்
ஏலக்காய்                          – சிறிதளவு

செய்முறை :

முதலில் வெல்லத்தை எடுத்து மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு தேங்காயை எடுத்து  துருவியதும், அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது நெய் ஊற்றி, அதில் துருவிய தேங்காயை போட்டு, பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.

பிறகு தனியா மாவு (கோதுமை, கடலை, பச்சை பயறு, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், சிவப்பரிசி, கொள்ளு,ஏலக்காய்,கழுவி, காயவைத்து,அரைக்கவும்.) எடுத்து, அதனுடன் தூளாக்கிய உருண்டை வெல்லத்தைச் சேர்த்து, நீர் விட்டு நன்றாகப் பிசையவும்.

பின்பு  பிசைந்த மாவுடன், வறுத்த தேங்காயை போட்டு, நன்கு கலந்து கொழுக்கட்டையாகப் பிடித்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து அதில் பிடித்து வைத்த கொழுக் கட்டைகளை வைத்து நன்கு ஆவியில் வேகவைத்து எடுத்து, பரிமாறினால் சுவையான நவதானிய கொழுக்கட்டை ரெடி.

Categories

Tech |