நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரபல நடிகர்களின் வெற்றி ரகசியம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர் . இவர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பலரால் பாராட்டப்பட்டார். மேலும் சீதக்காதி திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் நடித்து அசத்தி இருந்தார். விக்ரம் வேதா , பேட்ட ஆகிய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரள வைத்தார். இதையடுத்து தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் ரஜினியிடமும், விஜய்யிடமும் நான் எந்தவித பந்தாவையும் பார்த்ததில்லை. மேலும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டால் கதாபாத்திரத்தை தவிர வேறு எதைப் பற்றியும் அவர்கள் சிந்திப்பதில்லை. இதுதான் அவர்கள் வெற்றியின் ரகசியம் என்பதை நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன் என்றார். மேலும் தனக்கு இவர்களுடன் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.