மஷ்ரூம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் – 200 கிராம்
பாசுமதி அரிசி – 200 கிராம்
முந்திரிப்பருப்பு – 10
பிஸ்தா பருப்பு – 10
குடை மிளகாய் – 1
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டா – 1 சிறிதளவு
தேங்காய்ப்பால் – 1 கப்
நெய் – 25 மில்லி லிட்டர்
மல்லித்தழை நறுக்கியது – 1 கப்
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
வெங்காயம் – சிறிதளவு
செய்முறை:
முதலில் மஷ்ரூம்களை எடுத்து நான்கு துண்டுகளாக நறுக்கி, இளம்சூடான தண்ணீரில், உப்பு போட்டு ஐந்து நிமிடம் வைத்து தண்ணீர் வடித்து எடுத்து கொள்ளவும்.
பின்பு குடை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். மேலும் தேங்காயை துண்டுகளாக நறுக்கி மிக்சிஜாரில் போட்டு நன்கு அரைத்து பால் எடுத்து கொள்ளவும்
பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அதன் பின்பு அடுப்பில் வாணலியை வைத்து அதில் பாசுமதி அரிசியை போட்டு ,தேங்காய்ப்பால், சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை முடி வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில், நெய் ஊற்றி முந்திரி, பிஸ்தாவை போட்டு நன்கு வறுத்து, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சைமிளகாய், வேக வைத்த சாதத்தை போட்டு நன்கு வதக்கவும்.
பின்னர் சாதம் நன்கு வதக்கியதும், அதனுடன் அஜினமோட்டா, சோயாசாஸ், மிளகுத்தூள் சேர்த்து சிறிது கிளறி இறக்கினால் சுவையான மஸ்ரூம் பிரியாணி ரெடி. மேலும் இதனுடன் நறுக்கிய பாதம் பிஸ்தாவை போட்டு தூவி கொள்ளலாம்.