வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தமிழகத்தை நோக்கி வருவதால் நாளை முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்கள் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.