கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் புரபோஸ் செய்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. அப்போது மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண திரண்டு இருந்தனர். அச்சமயத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் ஒருவர் புரபோஸ் செய்தார்.
அதை கண்டு ஆச்சரியம் அடைந்த அந்த பெண் காதலுக்கு ஓகே சொன்ன உடன், மைதானத்திலேயே அந்த இளைஞர் பெண்ணுக்கு மோதிரம் மாட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.