Categories
சினிமா தமிழ் சினிமா

தாயிடமிருந்து கிடைத்த ‘அன்பு பரிசு’… இன்ப அதிர்ச்சியில் சிம்பு …!!

நடிகர் சிம்புவிற்கு அவரது தாயார் உஷா ராஜேந்திரன் அன்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சிம்பு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். தற்போது இவர் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘மாநாடு’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தான்  நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது அவரே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

மேலும் ஓய்வின்றி அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் சிம்புவுக்கு பிடித்த  கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். தாயிடமிருந்து எதிர்பாராத பரிசை பெற்று மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற சிம்பு தற்போது அந்த காரில் உலா வருகிறாராம் .

Categories

Tech |