நடிகை ஐஸ்வர்ய லட்சுமி அளித்த பேட்டியில் தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘ஆக்ஷன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்ய லட்சுமி அளித்துள்ள பேட்டியில் ஜகமே தந்திரம் படத்திற்கு முன்னதாக இன்னொரு படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டேன். அந்த திரைப்படத்தில் பிராமணப் பெண் கதாபாத்திரம் தனக்கு சரியாக பொருந்தியது ஆனால் அந்த பாஷையை சரியாக பேச தெரியாத காரணத்தினால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால்அது எந்த படம் என்பதை தெரிவிக்கவில்லை.