Categories
உலக செய்திகள்

“உஷாரா இருங்க” 6 வயதில் சிக்கியது…. 59 வயதில் வேலையை காட்டியுள்ளது…. காத்திருந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவருக்கு மூக்கில் நாணயம் சிக்கியிருந்ததை ஸ்கேனில் கண்ட மருத்துவர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷியாவை சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சமீபத்தில் தனது மூக்கின் வலது பக்க நாசியில் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் ஏதோ ஒரு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதன்பின் அது நாணயம் என்பதை அறிந்துள்ளார். இவர் தன்னுடைய ஆறு வயதில் மூக்கில் நாணயத்தை வைத்து விளையாடிய போது எதிர்பாராதவிதமாக அது நாசியில் சிக்கி இருக்கிறது.

இந்நிலையில் அவருடைய தாயார் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் இதைப் பற்றி தன் அம்மாவிடம் கூற பயந்துள்ளார். இந்த பாதிப்பு சிறுவயதில் ஏற்பட்டது என்பதால் இந்த பிரச்சினையை அப்படியே விட்டுள்ளார். இதையடுத்து 53 ஆண்டுகளுக்குப் பின்னால் பாதித்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் நாசியில் மருத்துவர்கள் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மேற்கொண்டு நாணயத்தை வெளியியே எடுத்துள்ளனர்.

இதையடுத்து தற்போது அந்த நபருக்கு மூச்சுத்திணறல் இல்லாமல் இருப்பதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நாணயத்தை சுற்றி கற்கள் இருந்துள்ளன. இந்த நாணயம் ரஷ்யா சோவியத் ஒன்றியம் ஆக இருந்தபோது பயன்படுத்தபட்ட நாணயம் ஆகும். இதுபோன்று சிறு வயதில் ஏதேனும் தெரியாமல் தங்கள் உடலில் பொருட்கள் சிக்கி இருந்தால் அதை ஞாபகப்படுத்தி சரி செய்து கொள்வது நல்லது. இல்லையென்றால்  உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

Categories

Tech |