Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால்… நடந்த விபரீதம்… கணவனின் வெறிச்செயல்..!!

செஞ்சி அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவர் நந்தினி என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நந்தினி தனது இரண்டாவது மகன் கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். விழா முடிந்ததும் இரவு தனது வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் சுரேஷ் தனது மகன் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த நந்தினி கிரித்திசின் பிறந்தநாளை தனது தாய் வீட்டில் கொண்டாடியதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதோடு அவரை தாக்கியுள்ளார். இதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வெள்ளிமேட்டுப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். நந்தினியின் தாய் ராதா செஞ்சி போலீசில் புகார் அளித்தார். தனது மகளிடம் சுரேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாகவும், இந்த நிலையில் பேரன் கிரித்திசின் பிறந்தநாளை மகளுடன் சேர்த்து கொண்டாடினேன். இதை அறிந்த சுரேஷ் எனது மகளிடம் தகராறு செய்து அவரை கொலை செய்துள்ளார்.

எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அதனடிப்படையில் செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மகன் பிறந்த நாளை மாமியார் வீட்டில் கொண்டாடிய மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |