நடிகர் விவேக் நடித்த காமெடி காட்சி ஒன்று இன்று நிஜமாகியுள்ளதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகர் விவேக் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். இவர் குறிப்பாக மரம் நடுவதை பல வருடங்களாக செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ் எதுவாக இருந்தாலும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு பகிரும் பழக்கம் அவருக்கு உண்டு. அந்த வகையில் தற்போது ரசிகர் ஒருவர் பகிர்ந்த மீம்ஸை விவேக் பதிவிட்டுள்ளார்.
பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி..இப்போது மீம்சில் ….😂😂 pic.twitter.com/SfHpLOylqa
— Vivekh actor (@Actor_Vivek) November 28, 2020
பவானி ஐபிஎஸ் திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியில் விவேக் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்து வாகனங்களுக்கு செலுத்துவார் . அது இன்று உண்மையாகியுள்ளது. தென்காசியில் சமையல் எண்ணெய் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை பயோடீசலாக மாற்றும் திட்டம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் நடிகர் விவேக் ‘பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேன்டா என்று அன்று செய்த காமெடி இப்போது மீம்ஸில்’ என பதிவிட்டுள்ளார்.