கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும் 18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுனில் குமாரை கைது செய்தனர்.மேலும் மற்றொரு குற்றவாளியான அ.தி.மு க பிரமுகர் சுஜின் ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.