Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஐந்து மாதங்களாக… வயிற்று வலியில் துடித்த இளம்பெண்… மனமுடைந்து எடுத்த முடிவு..!!

சிங்காரப்பேட்டை அருகே பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபிசெட்டிபாளையம், குள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மனைவி உமா சங்கரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் உமா சங்கருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் வயிற்றுவலி குணமாகவில்லை. மனமுடைந்து உமா சங்கரி விஷம் குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலனின்றி உமாசங்கரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Categories

Tech |