Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகன் பிறந்த நாளில்…! “மனைவி இறப்பு”… கணவனின் வெறிச்செயல்… விழுப்புரத்தில் பரபரப்பு….!!

விழுப்புரம் மாவட்டம் அருகே மகன் பிறந்தநாளை மாமியார் வீட்டில் கொண்டாடியதில் கோவம் அடைந்து மனைவியை அடித்துக் கொலை செய்த கணவணை போலீசார்  கைது செய்தனர் .

விழுப்புரம் மாவட்த்தில் செஞ்சி அருகில் உள்ள ஏதாநெமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி 26 வயது. அதே ஊரைச் சேர்ந்த பெயிண்டரான சுரேஷ் வயது 35 இருவருக்கும்  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று உள்ளது.  சுரேஷ், நந்தினிக்கும்  3 மகன்கள் உள்ளனர். ந .வ 28-ம் தேதி நந்தினி தனது 2-வது மகன்கிரித்திசின் பிறந்த நாள் விழாவை, அதே ஊரில் வசிக்கும் தனது தாய் வீட்டில் நந்தினி  கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் .

விழா முடிந்த பிறகு  நந்தினி தனது வீட்டுக்கு சென்று  இருக்கிறார். சுரேஷ் தன்  மகன் பிறந்த நாளுக்காக, கேக் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு  வந்துள்ளார். அப்போழுது  நந்தினி, கிரித்திசின் பிறந்த நாளை எனது தாய் வீட்டில் கொண்டாடியதாக சுரேஷ்யிடம்   கூறியுள்ளார். இதில் கோவமடைந்து தனது மனைவியிடம் சண்டை போட்டு அவரை தாக்கி உள்ளார்   அதில் நந்தினி மயங்கி கீழே விழுந்து  விட்டார்.

அதில்  அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்  நந்தினியை  சிகிச்சைக்காக வெள்ளிமேடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால்  மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு நந்தினயை பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக கூறினர். இது குறித்து நந்தினியின் தாயரார்  செஞ்சி காவல்துறைக்கு   புகார் அளித்து  உள்ளார்.

புகாரில் தனது மகளிடம், சுரேஷ்ம் அவரின்  பெற்றோரும்  வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்து  உள்ளனர். இருந்தும் எனது 2-வது பேரன்  பிறந்த நாளை மகளுடன் சேர்ந்து கொண்டாடினேன். இதனையறிந்த சுரேஷ் எனது மகளிடம் சண்டை போட்டு உள்ளார். மேலும்  அடித்துக் கொலை செய்து விட்டார். என்றும்  இது குறித்து உரிய விசாரணை மேற் கொள்ள வேண்டும்  என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் செஞ்சி காவல்துறை  இன்ஸ்பெக்டர் அன்பரசு, சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் இருவரும் வழக்குப்பதிந்து  சுரேஷ்சை கைது செய்தனர். மேலும் இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |