ஜோ பைடனுக்கு காலில் அடிபட்டதால் முறுத்துவமைக்கு சென்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருப்பவர் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்(78). இவர் தன்னுடைய வளர்ப்பு நாயான மேஜருடன் நேரத்தை செலவிடுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று நாயுடன் விளையாடும் பொது தடுக்கி விழுந்ததில் அவரது கணுக்கால் சுளுக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் வருடம் ஜனவரி 20ம் தேதியன்று அதிபராக பெறுபேற்கும் ஜோபைடன் அவரின் குடும்பத்துடன் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு செல்லும் நிலையில், அவருடைய வளர்ப்பு நை மேஜரும் தங்க வைக்கப்படும். மேலும் கடந்த நூற்றாண்டு அமெரிக்க வரலாற்றிலேயே ஜனாதிபதி மாளிகைக்கு செல்லப்பிராணியை அழைத்து செல்லாத முதல் அதிபர் டொனால்டு டிரம்ப் என்று கூறப்படுகிறது.