வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் மீனவர்கள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர்.