நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் இன்று காலை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில், கட்சி உதயம், சட்டமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு, தேர்தல் வியூகம், யாருடன் கூட்டணி வைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரஜினி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது இன்று தெரியவரும். அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் சில கட்சியினரும் ரஜினியின் வரவேற்ப்பை நோக்கி காத்துள்ளனர்.