Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். மேலும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளை ஏழாம் தேதி முதல் திறக்கவும் அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து டிசம்பர் 14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் சுற்றுலா பயணிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |