வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் புதிதாக நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் தமிழக கடலோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்களிடையே ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.