நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது பற்றிய ஜனவரி மாதத்தில் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா? என்பது பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இதனையடுத்து கட்சி தொடங்குவது பற்றி ஜனவரி மாதத்தில் நடிகர் ரஜினிகாந்தை அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி தொடங்கினால் ஏற்படும் சாதக மற்றும் பாதக அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கருத்து கேட்டு வருகிறார். இந்நிலையில் கட்சி ஆரம்பித்தால் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என அவரின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.