இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட்டின் போது மைதானத்தில் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் ஒருவர் காதலை ப்ரப்போஸ் செய்த சம்பவம் மைதானத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சீர்நியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய பெண் ஒருவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். மோதிரம் கொடுத்து ப்ரப்போஸ் செய்த இளைஞரின் காதலை அந்த பெண்ணும் ஏற்றுக்கொண்டார்.
இந்த இந்தியா ஆஸ்திரேலியா ஆட்டத்தை தாண்டி இந்த காதல் காட்சிகள் இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் கைதட்டி ரசித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.