Categories
தேசிய செய்திகள்

தீவிரம் அடைந்துவரும் விவசாயிகளின் போராட்டம் – அவசர ஆலோசனை

டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உள்துறை பாதுகாப்பு துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் பாஜக தலைவர் திரு. ஜேபி நட்டா இல்லத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லி ஷாலோ போராட்டத்தை 4 நாட்களாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் புராரி மைதானத்தில் போராட்டத்தை நடத்த மறுத்துவிட்டனர். இந்த நிலையில் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். 4 மாதத்திற்கு தேவையான ரேஷன் பொருட்களுடன் வந்துள்ளதாக தெரிவித்த அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் வேளாண் துறை அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் ஆகியோர் டெல்லியில் உள்ள தேசிய தலைவர் திரு. ஜேபி நட்டா வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Categories

Tech |