Categories
தேசிய செய்திகள்

இன்று ஆண்டின் இறுதி சந்திர கிரகணம்… ஆனால் பார்ப்பது கடினம்…!!!

இன்று நிகழும் சந்திர கிரகணம் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் என்றாலும் இந்தியாவில் இதனை பார்க்க இயலாது.

2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது நிகழ்கிறது. பூமியின் வெளிப்புற நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும் போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் மூன்று முறை சந்திரகிரகணம் தோன்றியுள்ளது. இந்த கிரகணம் அடி வானத்துக்குக் கீழே இருப்பதால் நம் நாட்டில் தெரிய வாய்ப்பு மிகவும் குறைவு. அது ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் நன்கு தெரியும்.

Categories

Tech |