Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் ரீமேக்கில் ஸ்ருதி ஹாசன்… சிறப்பு தோற்றத்தில் நடிக்க முழு சம்பளம் …!!

ரீமேக் படத்தின்  சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் ஹிந்தியில் வெளியான பின்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பிங்க் திரைப்படத்தில் அமிதாப் பச்சனுக்கு மனைவி கிடையாது ஆனால் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித்திற்கு மனைவியாக நடிகை வித்யாபாலன் நடித்திருந்தார்.

 

 

 

இந்நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது . இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில்  வித்யாபாலன் கதாபாத்திரத்தில் நடிக்க எந்த நடிகையும் முன்வராத நிலையில்  தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் ஒத்துக்கொண்டுள்ளார் . மேலும்  சிறப்புத் தோற்றமாக இருந்தாலும் அவருக்கு முழு சம்பளம் அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |