Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“இப்படியொரு கொடூர நட்பா” நண்பனை கொன்று…. பிணத்துடன் ஒருவாரம் தங்கிய கொடூரன்…. திகில் சம்பவம்…!!

நபர் ஒருவர் தன் நண்பரை தலையில் கல்லை போட்டு கொன்று, அந்த பிணத்துடன் ஒரு வாரம் தங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள குடியிருப்பில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் இருவர் ஒரே அறையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதையடுத்து திடீரென்று ஒரு நாள் அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து பார்த்தபோது அங்கிருந்த சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர் தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து என்பதும், அவருடன் தங்கி இருந்த மதுரையை சேர்ந்த சங்கர் என்பவர் மாயமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சங்கரிடம் நடந்தபட்ட விசாரணையில் கடந்த 2018ம் வருடம் கங்காநகர் பகுதியில் தன்னுடன் தங்கியிருந்த நண்பருடன் ஏற்பட்ட தகராறில் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தததாள் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 90 நாட்களுக்கு பிறகு வெளிவந்த அவர், இசக்கிமுத்துவுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு ஒரே அறையில் தங்கியுள்ளார்.

பின்னர் மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இசக்கிமுத்துவை கொலை செய்து அந்த சடலத்துடன் ஒரு வாரம் அதே அறையில் தங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து குடிபோதையில் தன்னுடன் பழகியவர்களை, ஒரே பாணியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்ட சங்கரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இவர் நண்பர்களுடன் ஒரே அறையில் தங்கி மது அருந்துவதும், பின்னர் அவர்களுடன் சண்டை ஏற்பட்டால் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

Categories

Tech |