Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் பக்தர்களின்றி நடைபெற்ற மகாதீபம் திருவிழா …!!

அக்னிஸ் தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி செப்புத் தகட்டால் செய்யப்பட்ட 5.2 அடி உயரம் கொண்ட கொப்பரை தயாரிக்கபட்டது.  1,000 மீட்டர் பருத்தித் துணியில் திரி தயாரிக்கப்பட்டு 3,600 கிலோ நெய்க்கொண்டு மாலை 6 மணிக்கு கோவில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை நகர வாழ் பக்தர்கள் பட்டாசு வெடித்தும் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றியும் அண்ணாமலையானுக்கு அரோகரா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். கொரோனா பரவலாக கிரிவலம் வரவும் மலை ஏறவும்  தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்குள் இருந்து தீபத்தை காணவும் அர்த்தநாரீஸ்வரரை  காணவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.கோவிலுக்குள் அதிகாரிகள் நீதி துறையைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினர் மக்கள் பிரதிநிதிகள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என சுமார் 2500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Categories

Tech |