Categories
அரசியல் மாநில செய்திகள்

எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ… ரஜினி உறுதி…!!!

கட்சி தொடங்குவது பற்றி எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியது. ஆனால் அந்த அறிக்கைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் அவர் கட்சி திரும்புவாரா? இல்லையா? என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில், அரசியல் நிலைப்பாடு பற்றி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து முடிவு செய்வதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் கட்சி தொடங்குவது பற்றி எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் என்று மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். மேலும் அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னுடன் இருக்க முடியாது. நான் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |