Categories
உலக செய்திகள்

கர்ப்பமும் இல்லை, அறிகுறியும் இல்லை…. குழந்தை பெற்ற 18 வயது பெண்…. ஆச்சர்ய நிகழ்வு…!!

18 வயது பெண் ஒருவர் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த Dion Seborne(18) என்ற இளம்பெண் வேல்ஸ் பகுதியில் உள்ள Royal Gwent மருத்துவமனைக்கு சாதாரண உடல் சோதனைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனை கழிப்பறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது சம்பந்தமாக முற்றிலும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பது ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் கர்ப்பமாக இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் என்னிடம் தெரியவில்லை.

நான் வித்தியாசமாகவும் உணரவில்லை, எடை போடவும் இல்லை. உண்மையில் என்னை பார்த்த பலரும் நான் எடை குறைந்து விட்டேன் என்றுதான் சொன்னார்கள். இது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பிறந்த அந்த நேரத்தில் அவசர உதவி பட்டனை என்னால் அழுத்த முடியாததால், செவிலியர் சத்தம் போட்டு கூப்பிடும் சூழல் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக தன்னுடைய காதலன் Callumn Morris க்கு தகவல் அளித்துள்ளார். இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவரின் காதலன், மருத்துவமனைக்கு வந்த பிறகும் தன்னுடைய சிரிப்பை அடக்க முடியாத அளவிற்கு சிரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |