Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தையின் உடலில்…. “கொரோனா ஆண்டிபாடிகள்” கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ நிகழ்வு…!!

குழந்தைகளின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் Celine Ng-chan. கர்ப்பிணியான இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இவருக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று ஆய்வு செய்தபோது தொற்று  இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆனால் அந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு அபூர்வ நிகழ்வாக மருத்துவர்களால் கருதப்படுகிறது.

இதற்கு காரணம் என்னவென்றால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் தான் கர்ப்பமாக இருக்கும் போதோ அல்லது பிரசவிக்கும் போது தன் கருவில் இருக்கும் குழந்தைக்கு கொரோனாவை பரப்ப முடியுமா? என்பது இதுவரை தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை ஒரு கர்ப்பிணியின் கருவில் இருக்கும் குழந்தையை சுற்றி இருக்கும் திரவத்திலோ அல்லது தாய்ப்பாலிலோ கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதேபோன்று ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்தில் உள்ள பெற்றோர் திருமணத்திற்கு சென்ற போது அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் 3 குழந்தைகள் திருமணத்திற்கு செல்லவில்லை. எனினும் குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் ஒட்டி இருந்த போதும் அவர்களுக்கு கொரோனா தொற்று பரவவில்லை. ஆனால் அவர்களின் உடலில் கொரோனா ஆண்டிபாடிகள் இருந்துள்ளது. இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் குடும்பத்திலுள்ள அனைவருடைய எச்சிலிலும் கொரோனா ஆண்டிபாடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது அபூர்வ நிகழ்வாக கருதப்படுகிறது.

Categories

Tech |