கடன் வாங்கி தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கடன் வாங்கி தேவையான பொருட்களை வாங்கலாம். அதையே ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி விட்டு அதனை கட்ட முடியாமல் மோசடியில் ஈடுபட்டால் நாலு சுவருக்குள் அமர்ந்து கம்பி எண்ண வேண்டியது தான். ஈரோட்டை சேர்ந்த கார்த்திக்-ராதிகா தம்பதியினர், கனரா வங்கியின் ஈரோடு வில்லரசம்பட்டி கிளைக்கு சென்று ராதிகா கார் லோன் கேட்டுள்ளார். தன்னை தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியின் கிளை மேலாளர் எனவும், ஆறு மாத சம்பளப் பட்டியல், மூன்று ஆண்டுகள் செலுத்தப்பட்ட வருமான வரி, கோவை ஹூண்டாய் நிறுவனத்தின் பெறப்பட்ட காருக்கான விலைப்பட்டியல் ஆகியவற்றை அதற்குள் இணைத்துள்ளார்.
இதனை நம்பி வாங்கிய வங்கியும் உடனடியாக அவர் பெயரில் புதிய கணக்கு தொடங்கி, கடந்த 17ஆம் தேதி 19 லட்சம் சம்பந்தப்பட்ட கார் நிறுவனத்திற்கு வரை ஓலையை தந்துள்ளனர். கடன்பெற்ற ராதிகா அவரது பெயரில் காரை வாங்காமல், அவருடைய கணவன் பெயரில் காரை பதிவு செய்துள்ளார். மேலும் காரின் ஆவணங்கள் எதையும் வங்கியில் ஒப்படைக்க வில்லை. இதனால் அவர் அளித்த ஆவணங்களை வங்கி ஆய்வு செய்து பார்த்தபோது அவை அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.
ராதிகா கார்த்திக் ஆகிய இருவரும் இதேபோல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 15 லட்சமும், மேட்டுக்கடை அருகிலுள்ள இந்தியன் வங்கியில் 14 லட்சமும், பெற்று ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனரா வங்கி கிளை மேலாளர் புகார் அளித்துள்ளார். அவர்கள் குற்றவாளியை விரைந்து முடிக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
தலைமறைவாக இருந்த அவர்களை பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து இரண்டு கார் மற்றும் 56 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். தொழில்கடன் கேட்டு சென்றால் ஹிந்தி தெரியுமா? என்று கேட்பது, பயிர் கடனுக்காக என்றால் வயது இல்லை என்று கூறி திருப்பி அனுப்பும் வங்கிகள், இது போன்ற ஆடம்பர செலவுக்குப் பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு அம்போ என்று உட்கார்ந்திருக்கும் நிலைமை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.