Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்ன ஐடியா வச்சிருக்காரு” ஒண்ணுமே புரியல…. கோலி மீது பாய்ந்த கம்பீர்…!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி செய்த தவறுகளுக்காக கம்பீர் அவரை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சு பெரிதாக இல்லை என்றும், இதற்கு காரணம் விராட் கோலி தான் காரணம் என்றும் முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறுகையில், “உண்மையை சொல்ல வேண்டுமானால் விராட்கோலி என்ன மாதிரி கேப்டன்சி யுக்தி வைத்திருக்கிறார் என்பது எதுவும் புரியவில்லை.

நாம் அனைவருக்கும் விக்கெட்டுகள் எடுப்பது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். அதிலும் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை வைத்து பார்த்தால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்தால் தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் நம்முடைய முக்கிய பந்துவீச்சாளரை சரியாக பயன்படுத்த வேண்டும். பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் 4-3-3 என்ற கணக்கில்தான் ஸ்பெல்கள் வழங்கப்படும்.  ஆனால் விக்கெட் எடுக்காத நேரங்களிலும் விராட் கோலி பும்ராவை 2 ஓவர்களோடு தடுத்துவிட்டார்.

அது ஏன் என்று இப்போது வரை எனக்கு புரியவில்லை. அவரின் கேப்டன்சி யுக்தியை புரிந்துகொள்ளவும் முடியவில்லை. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு விராட் கோலியின் தான் காரணம். அடுத்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் அல்லது சிவம் தூபே அல்லது வேறு யாருக்காவது வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.  அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்து தான், அவர்களை மதிப்பிட வேண்டும் . ஏற்கனவே ஐபிஎல் தொடரின்போது கம்பீர் விராட்கோலியை கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது ஒரு நாள் தொடரில் கோலி செய்த தவறுகளால் மீண்டும் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |