பட்டியலின பழங்குடி மக்கள் கல்வி கற்கக் கூடாது என்பதே பாஜகவின் இலக்கு என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
60 லட்சம் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி 11 மற்றும் 12ம் வகுப்புகளில் 60 லட்சத்திற்கு மேற்பட்ட பட்டியல் இன பழங்குடி மாணவர்களுக்கான மத்திய அரசின் உதவித் தொகை திட்டம் 14-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பழங்குடி மக்களும் பட்டியல் இனத்தவர்களும் கல்வி கற்கக்கூடாது என்பதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-யின் நோக்கம் என்றும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்துவது அவர்களது கல்விக்கு முடிவு கட்டுவதற்கான வழி என்றும் திரு. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.