Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (01-12-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

01-12-2020, கார்த்திகை 16, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி மாலை 04.52 வரை பின்பு தேய்பிறை துதியை.

ரோகிணி நட்சத்திரம் காலை 08.30 வரை பின்பு மிருகசீரிஷம்.

அமிர்தயோகம் காலை 08.30 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

முருக வழிபாடு நல்லது.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் –  01.12.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு மந்தமாக தான் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருக்கும். வீட்டில்  விட்டுக்கொடுத்துச் செல்வதால் மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களில் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மீக வழிபாடு மனதிற்கு திருப்தி கொடுக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பணவரவு சீராக இருக்கும். உடல்நிலையில்  சுறுசுறுப்பு காணப்படுவீர்கள். சிக்கனமாக செயல்பட்டால் கடன் தொல்லை தீரும். குடும்பத்தில் அனைவருடனும் தெய்வதரிசனம் பயணங்கள் மேற்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு மனக்குழப்பம் உண்டாகும்.உறவினர்களிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும். உத்யோகத்தில் போட்டி பொறாமை நீங்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு மன அமைதி உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வெளி பயணங்களால் அனுகூலம் இருக்கும். தொழிலில் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு இருக்கும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.தொழிலில் பணிச்சுமை அதிகரித்தாலும் உடன் இருப்பவர்களால் வேலைப்பளு சற்று குறையும்.புதிய கார் இதில் எடுக்கும் முயற்சி அனைத்தும் அனுகூலப் பலனை கொடுக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீட்டில் தேவையில்லாத பிரச்சினை தோன்றும். தேவை இல்லாத செலவுகளுக்கு கடன் வாங்க கூடும். குழந்தைகளின் ஆதரவு இருக்கும். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை அளிக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு மனக் குழப்பம் இருக்கும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைக்க வேண்டும்.பிறரிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது பிரச்சனைகள் தீரும். வெளி பயணங்களில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகள் பலம் குறைந்து உங்கள் பலம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆதரவு நன்மையை அளிக்கும். பயணம் அனுகூலத்தை கொடுக்கும். தொழிலில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு எந்த செயலும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு இருக்கும். தொழிலில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சனையை சந்திக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பொதுவாக ரீதியில் வெளிப் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். கடன் தொல்லை ஓரளவு நீங்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறி செலவு உண்டாகும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் குறையும்.எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். நண்பர்களின் ஆலோசனையால் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரியவர்களின் ஆதரவு ஒத்துழைப்பை கொடுக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கூடும். உடன் இருப்பவர்கள் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் லாபம் ஏற்படும்.

Categories

Tech |