Categories
உலக செய்திகள்

“பழைய பொருளை தூக்கி போடும் முன்” check பண்ணுங்க…. இந்த மாதிரி அதிர்ஷ்டம் கிடைக்கலாம்…. பதிவிட்ட பெண்…!!

பெண் ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும் போது ஏராளமான கரன்சி நோட்டுகள் கிடைத்துள்ளதால் வியப்படைந்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அவருடைய வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதனால் அடிக்கடி வீட்டை துடைப்பது, வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்வதுமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அவர் வாஷிங் மெஷின் டிராயரை ஸ்குரூ டிரைவரால் கழட்டிய போது உள்ளே ஏராளமான கரன்சி நோட்டுகள் இருப்பதை பார்த்து வியப்படைந்துள்ளார்.

இந்த விஷயத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த பெண், “உங்களுடைய பழைய பொருட்களை தூக்கி போடும் முன் ஒரு ஸ்குரு டிரைவரை வைத்து அதை திறந்து பார்ப்பது நல்லது. இது போன்று அதிர்ஷ்டம் கிடைக்கலாம்” என்று கூறியிருக்கிறார். இதையடுத்து  அவரது பதிவு 29 ஆயிரம் முறை பகிரப்பட்டதுடன் பணம், பணம் என தங்கள் பண ஆசையை கருத்தாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் நெட்டிசன்கள் சிலர்.

Categories

Tech |