இளைஞர் ஒருவர் பல பெண்களிடம் பேசி பழகி போதைப்பொருள் கொடுத்து தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவைச் சேர்ந்த வாலிபர் முஹம்மத் ரஹித் (25). இவர் 13 வயது சிறுமி ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி, மதுபானம் மற்றும் போதை மருந்துகளை கொடுத்து தவறாக நடந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் கொடுக்கப்பட்ட புகாரில் காவல் துறையினர் ரஹித்தை தேடியபோது சிக்கவில்லை. இதன் பின்னர் இவர் மேலும் இது போன்ற சில பெண்களிடம் பேசி மதுபானம் மற்றும் போதைப் பொருளை கொடுத்து தான் நினைத்ததை சாதித்துள்ளார்.
இந்நிலையில் பத்து மாதங்களுக்கு பின்னர், அவரை காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்னதாக கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.