Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆர்யா 30’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் … ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு… ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!

நடிகர் ஆர்யா நடிக்கும் ஆர்யா 30 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனான ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் , சர்வம், பாஸ் என்கிற பாஸ்கரன் ,ராஜா ராணி ஆகிய திரைப்படங்கள் ஹிட்டடித்தது . மேலும்  கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘மகாமுனி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து நடிகர் ஆர்யா ‘டெடி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அவரது மனைவியும் நடிகையுமான சாய்ஷா நடித்துள்ளார்.

 

தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘ஆர்யா30’ . இந்த திரைப்படத்தில் அறிமுக நடிகை துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசுக்காக ஆர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Categories

Tech |