நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் விரைவில் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடேங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது படிப்படியாக சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உட்பட தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 சுற்றுலா தளங்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால் தொட்டபெட்டா முதுமலை படகு இல்லம் போன்றவைகள் திறக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில் உதகையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி இன்னசென்ட் திவ்யா நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவை திறக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு கட்டாயம் தேவை என்றும் குறிப்பிட்டார்.