புரெவி புயல் எதிரொலியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கின்றார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். புரெவி புயல் எதிரொலியால் தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தலைமை செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் நாளை மதியம் 12 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் பேருந்து சேவை, நிவாரண முகாம், மக்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏழு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கன்னியாகுமரியில் இருந்து 1040 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி மாலை அல்லது இரவு புரெவி புயல் புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.