மைதா – 1/2 கப்
தேங்காய் – 1
சர்க்கரை – 1 1/2 கப்
முந்திரி – 10
தேங்காய் – 1
சர்க்கரை – 1 1/2 கப்
முந்திரி – 10
செய்முறை:
முதலில் அல்வா செய்வதற்கு முந்திய நாள் இரவே மைதாவை, சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து தண்ணீரில் ஊற விட வேண்டும்.
பின்பு அதில் 3 கப் தண்ணீரை கூடுதலாக சேர்த்து பால் பத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் பால் போன்று இருக்கும் மைதா தண்ணீரை வடிகட்டி, வேறொரு பாத்திரத்தில் ஊற்றவும்.
பின் மறுநாள் வடிகட்டிய பாலின் மேலோடோயை மட்டும் நீக்கி, பயன்படுத்வும். தொடர்ந்து தேங்காயை துருவி அதிலிருந்து, 3 கப் வரை தண்ணீர் சேர்க்காமல் பாலை எடுத்து வைக்க வேண்டும்.
ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து, அதில் அரைத்து வைத்த தேங்காய்பால், சர்க்கரை, முந்திரி பருப்பு மற்றும் மைதா பாலினையும் சேர்த்து ஒன்றாக கலக்கி கொள்ளவும்.
அதனை தொடர்ந்து கெட்டிப்பதம் வரும் வரை கலக்கி கொண்டே இருக்கவும். பின் தேங்காய்பாலில் இருக்கும் எண்ணெய் சூட்டில் வெளிவந்து அல்வா பதத்திற்கு வந்துவிடும். அல்வா சுருண்டு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி தட்டில் பரிமாறலாம். இப்பொழுது சுவையான மஸ்கோத் அல்வா தயார்.