வேர்கடலை – தேங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
உளுந்து – ஒரு தேக்கரண்டி
வேர்கடலை – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
கொத்தமல்லி – சிறிது
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் – தாளிக்க
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி – தேவைக்கு ஏற்ப
தேங்காய் துருவல் – கால் கப் வடித்த பச்சரிசி சாதம் – 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
உளுந்து – ஒரு தேக்கரண்டி
வேர்கடலை – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – சிறு துண்டு
கொத்தமல்லி – சிறிது
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் – தாளிக்க
தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி – தேவைக்கு ஏற்ப
தேங்காய் துருவல் – கால் கப் வடித்த பச்சரிசி சாதம் – 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
செய்முறை :
முதலில் உதிரியாக வடித்த சாதத்தை தட்டில் போட்டு, அதனுடன் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு ஆற விடவும்.
பின் கொத்தமல்லி மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கியும், பச்சை மிளகாயை இரண்டாக கீறியும் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், அதில் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்தப்பின், அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இறுதியில் கொத்தமல்லி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து, ஆறியப்பின், அதனை சாதத்துடன் சேர்த்து கலந்து பரிமாறவும். இப்போது சுவையான வேர்கடலை – தேங்காய் சாதம் தயார்.