பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் செய்ய தேவையான பொருட்கள்:
பேபி உருளைக்கிழங்கு – 2 கப்
தயிர் – 2 கப்
எண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
லெமன் ஜீஸ் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது – 1 ஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை:
முதலில்அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். பின்பு வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்டு தயிர், மிளகுதூள், லெமன் ஜூஸ், நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து
பரிமாறும் போது வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால் சுவையான பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.