பிரதமரின் கிஷான் திட்டத்தின் மூலம் 6000 நிதி உதவி எவ்வாறு பெற வேண்டும் என்பதே இதில் காண்போம்.
பிரதமரின் விவசாயிகளுக்கான கிஷான் திட்டத்தின் மூலம் நடந்த ஊழல்கள் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 2018ம் ஆண்டு சிறு குறு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு ரூ. 6000 வழக்கும் பிரதமரின் கிஷான் திட்டம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் உண்மையான விவசாயிகளுக்கு போய் சேர்ந்தோ இல்லையோ ஆனால், விவசாயி அல்லாதவர்களுக்கு போய் சேர்ந்துள்ளது வெளிவந்த முறைகேடுகளால் வெளிச்சத்துக்கு வந்தது.
இருந்தும், இன்னனும் ஏராளாமான விவசாயிகள் இந்த திட்டம் போய் சேராமல் இருப்பதும் உள்ளது. உண்மையில் இதன் பயனாளியாக வரையறுக்கப்பட்டவர்கள் யார், திட்டத்தில் பயன்பெற எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்பது பற்றி முழுமையாக தெரியாததும் ஒரு காரணம். எனவே இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
எப்படி விண்ணப்பிப்பது?
கிராம நிர்வாக அலுவலர் பட்டா, சிட்டா சான்றிதழ்கள், சர்வே எண்கள் ஆகியவற்றைச் சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார். அந்தச் சான்றிதழுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டையை இணைத்து வட்டார வேளாண்மை அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற வேண்டும் என்பதற்காகக் குடும்ப அட்டையும் கட்டாயம்.
தகுதிகள் என்ன?
கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் பலன் பெற வேண்டும் எனில் 5 ஏக்கர் வரை மட்டுமே நிலம் வைத்திருக்க வேண்டும். பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆதார் இணைப்பு கட்டாயம்:
அடுத்தாக முக்கியமான ஒன்று இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறும் விவசாயிகள் கட்டாயம் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். அப்படி இணைக்காவிட்டால் அவர்களுக்குஇனி நிதி கிடைக்காது. ஆதார் இணைப்புக்கான கால அவகாசத்தை சென்ற ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு நீட்டித்திருந்தது.
அஸ்ஸாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டும் 2021 மார்ச் மாதம் 31ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிசம்பர் மாதம்தான் கடைசி அவகாசமாக அறிவிக்கப்பட்டது. அப்படி உங்களது ஆதாரை நீங்கள் இணைக்காமல் இருந்தால் உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதார் நகலை உங்களது கையொப்பத்துடன் வழங்கி இணைக்கலாம். வங்கி கணிக்கில் ஆன்லைன் பேங்கிங் வசதி இருந்தால் ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்கலாம்.