வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது. அது இன்று மாலை இலங்கையில் கரையை கடக்கிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக அதீத கனமழை பெய்யும் என்பதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.