கொரோனாவை மேலும் கட்டுக்குள் வைக்க ஒரு புதிய அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் அலட்சியமாக இருப்பதால் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி சந்தையில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொருள் வாங்கினால் சலுகை தரலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் சந்தை மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ளே நுழைவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகளை பின்பற்றலாம் என்று ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது கொரோனாவை மேலும் கட்டுக்குள் வைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.