சென்னையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் பாமகவினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் நடந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தை பாமக தலைமை ஏற்று நடத்துகிறது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதன்பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்னைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனைவரும் திரும்பி செல்ல வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியதால், பாமகவினர் மற்றும் போலீசாருக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுவது மட்டுமல்லாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.