புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான கொரோனா வரியை ஜனவரி 31 வரை நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் மீதான வரியை ஜனவரி 31ஆம் தேதி வரையில் நீட்டித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் வரியை குறைக்க முடிவு எடுத்த நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பண்டிகைகள் வருவதால் மதுபானங்கள் மீதான கொரோனா வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா ஊரடங்குக்கு பிறகு மதுக் கடைகள் திறக்கப்பட்ட பின் தமிழகத்திற்கு இணையாக புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.