கணவர் ஒருவர் மனைவியை வயிற்றில் எட்டி உதைத்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆஷாவின் கணவர் அருண் கூறுகையில், தன் மனைவி ஆடு மேய்க்க சென்ற போது ஆடு உதைத்ததால் பாறையில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஆஷா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் ஆஷாவின் பெற்றோர்கள் தங்களுடைய மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், ஆஷா கீழே விழுந்ததற்கான அடையாளம் எதுவுமில்லை என்றும், பிரேத பரிசோதனையில் வயிற்றில் மட்டுமே பலத்த காயங்கள் இருந்துள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இதன் பின் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில், ஆஷாவின் இரண்டு குழந்தைகளிடம் மற்றும் அருணின் தாயாரிடமும் விசாரித்துள்ளனர். அப்போது அருண் ஆஷாவை குடிபோதையில் எட்டி உதைத்ததும், இதனால் ஆஷா மயங்கி விழுந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அருணை கைது செய்துள்ளனர்