பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா என்ற போட்டியாளர் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் . இதையடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற 7 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக ஹவுஸ் மேட்ஸ் சக போட்டியாளர்களை நாமினேட் செய்வதற்கு கூறப்படும் காரணங்களை பிக்பாஸ் அனைவரின் முன் போட்டு உடைத்து விடுகிறார் .
அதன்படி இந்த வாரம் பாலாவின் ஷேடோவில் இருக்கிறார், கருத்துக்களை முன் வைக்க தயக்கம் காட்டுகிறார், விளையாட்டுத்தனமாக இருக்கிறார், பேக்கேஜ் வைத்திருக்கிறார், சிரிச்சுக்கிட்டே எல்லாரையும் ஹர்ட் பண்றாங்க போன்ற காரணங்களுக்காக நாமினேட் ஆனவர்கள் சிவானி ,ஆஜித், ஆரி, நிஷா, சனம், அனிதா,ரம்யா பாண்டியன் . இதில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு ஆஜித்துக்கு இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.