சென்னையில் வன்னியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி பாமக சார்பாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
வன்னியர் சமூகத்தினர் 80களில் நடத்திய தொடர் போராட்டங்கள் காரணமாக 89ஆம் ஆண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு வன்னியர் உள்ளிட்ட ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால் மிக பிற்பட்டோர் மக்கள் தொகையில் 75% இருக்கும் வன்னியருக்கு 7 முதல் 8 சதவீதம் அளவு வரையில் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பலன் கிடைக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதன் காரணமாக கல்வி வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு தனியே 20 சதவீத ஒதுக்கீடு வேண்டும் என்று சென்னையில் இன்று வன்னியர் சங்க போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.